மூட்டு வலிக்கு முடக்கற்றான்... உடல் மெலிய முடக்கற்றான்!!
Podhigai Herbs and Organic
0

மூட்டு வலிக்கு முடக்கற்றான்... உடல் மெலிய முடக்கற்றான்!!

06.05.22 07:35 AM Comment(s) By Podhigai Herbs & Organic

முடக்கற்றான்முடக்குகளை அறுப்பதால் ”முடக்கறுத்தான்” என்று பெயராகி அது மருவி  ’முடக்கற்றான் ‘, ’ முடக்கத்தான் ’ என்று ஆகிவிட்டது. சங்க இலக்கியங்களில் பேசப்படு ஊழிஞைத் தினைக்குரிய ;ஊழிஞை’ முடக்கற்றன் ஆகும். இன்றலவும் கன்னியாக்குமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளிலும், கேரளா மாநிலத்திலும் முடக்கற்றான் கொடி ’ஊழிஞை’ என்றே அழைக்கப்படுகிறது. இது போல் நிறைய மூலிகைகளின் பெயர்கள் கேரளாவில் தமிழ்சங்க  இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள பெயர்களாலேயே அழைக்கப்படுவது வியப்பான விசயமாகும். 

முடக்கற்றான் அவித்து விழிந்து சாறு எடுத்து, அதனுடன் உப்பு, மிளகு சேர்த்து  ரசம்  செய்து சாப்பிட்டால், சுவையாக இருக்கும். இந்த ரசத்தை வாரம் இரண்டு முறை உண்டு வந்தால் வாய்வு கலையும், மலச்சிக்கல், வாதவலி ஆகியவை குணமாகும்.

Read More: கரிசலாங்கண்ணியில் இவ்வளவு அற்புத சக்தியா....

வாத நாராயணன், தழுதாலை, முடக்கற்றான் ஆகிய மூன்று மூலிகைகளுக்கும் வாதத்தை குனமாக்கும் பன்புகளும், மலமிளக்கும் பன்புகள் உள்ளது.

Read More: இது இருந்தா போதும் உங்களுக்கு சர்க்கரை வியாதியே வராது…! 8 /40

உடல் மெலிய முடக்கற்றான்


முடக்கற்றான் இலைகளைப் பச்சரிசி மாவுடன் சேர்த்து அரைத்து, அடையாகச் சமைத்து சாபிட்டு வந்தால் உடல் வலி தீரும். உடல் பருத்தவர்கள் இதைச் சாப்பிட்டால், கெட்ட நீர் வெளியேர் உடல் மெலியும். முடக்கற்றான் இலைகளை நிழலில் உலர்த்திப் பொடிசெய்து காலை, மாலை உணவுக்குப் பிறகு 1 தேக்கரனடியளவு மூன்று மாதங்கள் சப்பிட்டு வந்தால் மாதவிடாய் சம்பந்தமான கோளாறுகள் சரியாகும்.

குறைவான மாதவிடாய், அதிக வலியுடன் கூடிய மாதவிடாய்க் காலங்களில் முடக்கற்றான் இலைகளை விளக்கெண்ணையில் வதக்கி அடிவயிற்றில் வைத்துக் கட்டினால் குணமாகும், அதோடு உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி அடையும்.

முடக்கற்றான் இலைசாற்றுடன் சம் அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துத் தைலமாகக் காய்ச்சி, காதுகளில் விட்டு வந்தால் காது வலி காதுகளில் சீழ் வடிதல் ஆகியவை குணமாகும். முடக்கற்றான் இலைகளை விளக்கெண்ணைய் விட்டு வதக்கி வாத வலி கண்ட இடங்கள், மூட்டு வீக்கங்களில் ஒற்றடம் கொடுத்து வந்தால் குணமாகும்.

முடக்கற்றான் இலைகளைக் கொடியுடன் பிடுங்கி ஒரு கையளவு எடுத்து உரலில்போட்டு இடித்து, அதனுடன் 5 வெள்ளைப் பூண்டு பல்,10கிராம் மிளகு, 600 மில்லி தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி 150 மில்லியாக சுண்டும் வரை வைத்துக் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நன்கு பேதியாகும். அதோடு வாய்வு மலச்சிக்கல், உடல் வலி , மூட்டு வீக்கம் ஆகியவை நீங்கும். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் குடிக்க வேண்டும். Benefits of Balloon Vine Leaves


முடக்கற்றான் வேரை ஒரு கைப்பிடியளவு எடுத்து உரலில் போட்டு இடித்து, 600 மில்லி தண்ணீர் சேர்த்து 200 மில்லி வற்ற வைத்து வடிகட்டி காலை மாலை இரு வேளைகளிலும் 100மில்லி அள்வு குடித்து வர தீராத வியாதி குணமாகும்.

அனைத்து இயற்கை மூலிகைகளையும் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்கவேண்டியவை. நம் பொதிகை இனையதளத்தில் ஆன்லைன் மூலம் எளிதாக ஆர்டர் செய்து வாங்கலாம். தொடர்புக்கு 7200931131 / 9840494462 

#முடக்கற்றான் #BenefitsofBalloonVineLeaves #podhigaiherbs #mudakatranpayankal #herbalonline #podhigaifoods #podhigaiherbs

Share -
Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.
0