Product description.
Sukku - 100G
Thippili - 100G
Vaal Milagu - 50G
Thirikatukam is a Tamil poetic work of didactic nature belonging to the Eighteen Lesser Texts anthology of Tamil literature. This belongs to the 'post Sangam period' corresponding to between 100 and 500 CE. Thirikatukam contains 100 poems written by the poet Nallathanaar.
சுக்கு:
உலர்ந்த இஞ்சி தான் சுக்காக மாறுகிறது. இஞ்சியின் சாறு அனைத்தும் உலர்ந்து போனதால் இவற்றில் சக்தி அதிகமாக இருக்கும். இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், நமது உடலின் ஜீரண உறுப்புகளுக்கு ஏற்ற அருமருந்தாகும். செரிமானம் செய்யக்கூடிய உணவுகளில் கார்போ ஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள் மற்றும் குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், கிளிசரால் போன்ற மூலக்கூறுகளாக மாற்றும் வேதி நிகழ்வு தான் இந்த செரிமானம் என்பதாகும். திடமான உணவுகளை கூட எளிதாக மாற்றக்கூடிய சக்தி நார்ச்சத்து உள்ள காய், கிழங்கு, கீரை வகைகளுக்கு உண்டு. இதில் அதிக சக்தி பெற்றது சுக்கு. இதற்கு உரியவர் குரு பகவான்.
மிளகு:
இந்தியாவின் கருப்பு வைரம் என்று வர்ணிக்கப்படும் பொருள் மிளகு. இவை மலைகளில் கொடி போல் படர்ந்து வளரக்கூடிய அதிக மருத்துவ குணம் கொண்டது. சற்று காரமாக இருந்தாலும், இதன் மருத்துவ பயன்கள் அதிகம். நுரையீரலில் உள்ள அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக்கூடியவை. சளிக்கும், ரத்த போக்கை நீக்குவதற்கும், கெட்ட கொழுப்பை கரைப்பதற்கும், குடல் புழுக்கள் நீங்குவதற்கும், விஷக்கடிகள் முறிவு செய்யவும், ரத்தத்தை சுத்தம் செய்யவும் இவை உதவும். இதற்கு உரியவர் செவ்வாய் கிரகமாகும்.
திப்பிலி:
சுக்கு-மிளகு என்றால் எல்லோருக்கும் தெரியும். ஆனால் திப்பிலி என்றால் பலருக்கு தெரியாது. திப்பிலி என்பது கோது என்பவையாகும். கோது என்றால் சூரணம் போன்ற பொடி வகையைச் சேர்ந்ததாகும். திப்பிலி என்பது ஒரு பொருளை குறிப்பிடும் சொல் அல்ல. மர சக்கை, பழத்தின் மேல் தோல், இலைச் சருகு, மரப்பட்டை, செடி கொடியின் வேர்கள் போன்ற மூலிகை அம்சங்களை கொண்டவை தான் திப்பிலி. இவை நோய் தன்மைக்கு ஏற்றவாறு பல மூலப்பொருட்கள் சேர்த்து செய்யப்படும் மருந்தாகும். இவை உடலில் மேல் பூசப் படுவதற்கும், உடல் உள்ளே சாப்பிடுவதற்கும் ஏற்ற மருந்தாக தயாரிக்கப்படுகிறது. இந்த திப்பிலிக்கு உரியவர் புதன்.
சுக்கு, மிளகு, திப்பிலி இம்மூன்றும் கொண்டு மருத்துவம் செய்யப்படுகிறது. பழங்கால மருத்துவ வகையில் இவையும் ஒன்று. தற்போது மலைவாழ் மக்கள் பயன்பாட்டில் உள்ளது என்றாலும், சித்தா, ஆயுர்வேதா மருந்துகள் தயாரிக்க இவற்றைப் பயன்படுத்திக் கொள் கிறார்கள்.
- திப்பிலி இருமல், இரைப்பு, தொண்டைப்புண், தொண்டைக் கட்டு இவற்றைக்குணமாக்கும். காது, மூக்கு சம்பந்தப்பட்ட கப நோய்களையும் போக்கும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
- நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல பிரச்சனைகளை தீர்க்கவல்லது. நெஞ்சு சளி, ஜலதோஷத்தை நீக்கும். நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்திறனை கூட்டும். இம்மண்டல பலவீனத்தை போக்கும்.
- நுரையீரலின் உயிர் சக்தியை அதிகபடுத்தும். கபம் சார்ந்த பிரச்சனைகளை போக்கும். இன உறுப்புகளின் கோளாறுகளை நீக்கும். ஆண்களின் விந்தடைப்பு என்ற பிரச்சனைக்கும் திரிகடுக சூரணத்தை பயன்படுத்துகின்றனர்.
- செரிமான சுரப்பி, வயிற்றில் சுரக்கும் நொதி கோளாறுகள் என எப்படி இருந்தாலும் சரி செய்துவிடும். வலிகளை போக்கும் மருந்துகளில், இந்த மருந்தை பல வலி நிவாரண மூலிகை மருந்துகளின் சேர்க்கையோடு சேர்ப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.