ஆண்மையை பெருக்கும் முருங்கை!!!!
Podhigai Herbs and Organic
0

ஆண்மையை பெருக்கும் முருங்கை!!!!

11.01.24 06:59 AM Comment(s) By Podhigai Herbs & Organic


”கார்த்திகை மாசத்துக் கீரையை கணவனுக்குக் கொடுக்காமல் தின்பாள்”, 

”கார்த்தைகை மாசத்துக் கீரையில் நெய் ஒழுகும்” என் முருங்கை குறித்த சொலவடைகள் தென் மாவட்டங்களில் இருக்கின்றன. ஆண்டு முழுவதும் இலைகள் இருந்தாலும் ஐப்பசி மாதம் பெய்யும் மழையைத் தொடர்ந்து, கார்த்திகை மாதம் மழை பெய்யும் போது முருங்கையில் புதுத் துளிர்கள் வரும். அந்தத் துளிகளில் உடலுக்குத் தேவையான் உயிர்ச்சத்துகள், உலோக உப்புக்கள் ஆகியவை அதிகமாக இருக்கும். மரம் பூக்கத் தொடங்கியவுடன் காரத்தன்மையுடன் இருந்த சத்துப்பொருள்கள் அமிலத்தன்மைக்கு மாறத் தொடங்கும். அதனால் கீரையில் சுவை குறையும். இது அனைத்துக் கீரைகளுக்கும் பொருந்தும். எந்தக் கீரையாக இருந்தாலும்,  அதைப் பூப்பதற்க்குள் பறித்துச் சமைத்து உண்ண வேண்டும்.

முருங்கைக்குக் காமத்தைப் பெருக்கும் சக்தி இருக்கிறதா? என்ற சர்ச்சை உண்டு. இந்த சர்ச்சைக்கு, பின்வரும் அகத்தியரின் பாடலில் பதில் உள்ளது>

“ தாளி முருங்கைத் தழை தூதனம் பசலை

வானிலறு கீரையுநெய் வார்த்துண்ணில் - ஆளியென்

விஞ்சுவார் போகத்தில் வீம்புரைத்த் பெண்களெலாம்

கொஞ்சுவார் பின்வாங்கிக் கேள்..”

                                                  - அகத்தியர் குணவாகம்

தாளிக்கிறை , முருங்கைக் கீரை, தூதுவேளை, பசலை, அறுகீரை, ஆகியவற்றில் ஏதாவதொரு கீரையை புளி சேர்க்காமல் சமைத்து சிறிதளவு பசு நெய் சேர்த்து தினமும் காலையில் மட்டும் நாற்பது நாள்கள் உண்டு வந்தால். ஆண்மை கட்டுக்கடங்காமல் பெருகும், கணவன் மேல் குறை கண்டுபிடித்து வீம்பு பேசிவரும் மனைவி மனம் மாறி கொஞ்சவும், கெஞ்சவு தொடங்குவர்.


”ஆண்மை பெருக்கி வணிகம்” இன்று உலகமெங்கும் கொடிகட்டிப் பறக்கிறது. பாலியல் குறித்த புரிதல் இல்லாமையே இதன் காரணம். ஆண்மையைப் பெருக்க நாமே சமைத்து உண்ணக்கூடிய மருந்து உணவுகள் ஏராளமாக உள்ளன. பாரம்பரிய சித்த மருத்துவத்தில் அமுக்காரா லேகியம், மகா பூரணாதி லேகியம், அயப்பூநாகச் செந்தூரம் முதலாம் உயர்ந்த மருந்துகள் பலவும் உள்ளன. இவற்றை நாட்டு மருந்துகடைகளில் நியாயமான விலையில் வாங்கி சாப்பிட்டு பயன்பெறாலாம். 

முருங்கை மரத்தின் பிசினை நிழலில் உலர்த்தி நன்கு உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அரைத் தேக்கரண்டியளவு பொடியை அரைத் தேக்கரண்டி கற்கண்டு பொடியுடன் சேர்த்து தினமும் பாலில் கலந்து உண்டு வந்தால் விந்து கெட்டிப்படுவதோடு செயல்திறன் அதிகமுள்ள விந்தணுக்கள் உற்பத்தியாகும். அடிக்கடி சிறுநீர் கழியும் நோயும் குணமாகும். 

முருங்கை விதையை வாயில் போட்டு மென்று தண்ணீர் குடித்தால் இனிப்பாக இருக்கும். இந்த முருங்கை விதையை பாலில் ஊறவைத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் செயல்பாடுதிறன் அதிகரிக்கும்.   முருங்கைவிதையில்ஆன்டி-ஆக்ஸிடண்ட், துத்தநாகம், வைட்டமின், சி, பிகாம்ப்ளக்ஸ்ஆகியசத்துக்கள்உள்ளன. முருங்கைவிதையைஅதிகமாகதாதுவிருத்திக்குரியலேகியங்களில்சேர்ப்பதுண்டு.

விதைகளை, நெய்யில்வறுத்துபொடித்து, பாலுடன்சேர்த்துகாய்ச்சிக்குடித்தால்ஆண்களுக்குவிந்தணுக்கள்அதிகரிப்பதுடன், விந்துவின்கெட்டித்தன்மைஅதிகமாகும். நரம்புகள்பலப்படும். குழந்தைப்பேறுஉண்டாகும்.பாலுடன்சேர்த்துகாய்ச்சிக்குடித்தால்தண்ணீர்போன்றவிந்துகெட்டிப்படும். விந்தணுக்கள்அதிகரிக்கும். உடலுக்குநல்லபலத்தைதரும். பெண்கள்சாப்பிட்டால்ரத்தசோகையைநீக்கிஉடலைபுத்துணர்ச்சியாக்கும்.

இதயத்தைப்பலப்படுத்தும். நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும்பலத்தைகொடுக்கும். மூட்டுகளின்இணைப்புகளில்வரும்வலியைபோக்குகிறது. அதிககால்சியம்இதுகொண்டுள்ளதால்எலும்புகளும்பலம்பெறும்

ஒரு கைப்பிடி அளவு முருங்கைப் பூக்களைப் பசும்பாலில் போட்டுக் காய்ச்சி இரவில் குடித்து வந்தால் ஆண்மை பெருகுவதோடு, போக நேரமும் அதிகரிக்கும்.  ஒருடம்ளர்பாலுக்குசிறுகைப்பிடிஅளவுமுருங்கைப்பூஎடுத்துகொள்ளவேண்டும். முருங்கைப்பூவைசுத்தம்செய்து ( அதில்புழுக்கள்இருக்கவாய்ப்புண்டு) அம்மியில்அரைத்துபாலில்சேர்த்துகாய்ச்சவேண்டும். நன்றாககொதித்ததும்அதில்நாட்டுசர்க்கரைஅல்லதுபனங்கற்கண்டுசேர்த்துகுடிக்கவேண்டும். தினமும்காலைஅல்லதுமாலைநேரங்களில்தொடர்ந்து 48 நாட்கள்வரைஇதைகுடிக்கவேண்டும். கணவன்மனைவிஇருவரும்குடிக்கலாம். இதுதாம்பத்தியஉறவில்நாட்டத்தைஉண்டாக்கும்.

முருங்கை பிஞ்சுகளை பறித்துச் சமைத்து தோலுடன் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தனியும், ஆண்மை பெருகும். 20 கிராம் முருங்கைப் பட்டையை ஒன்றிரண்டாக இடித்து மிளகு சீரகம், உப்பு சேர்த்து சூப் தயாரித்துக் குடித்து வந்தால், முழங்கால் வலி குறையும். காய்ச்சலுக்குப் பின்வரும் சோர்வுக்கு இது மிகவும் சிறந்த மருந்து. உடலில் இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் முருங்கை இலைப் பொடியை பாலுடனு சேர்த்து பருகி வந்தால் இரும்பு சத்து குறைபாடி நீங்கும். 

மேலும் முருங்கையில் பல வகைகள் உள்ளன அவை:

முள் முருங்கை ( கல்யான முருங்கை)

தவசி முருங்கை

புனல் முருங்கை

இவற்றின் பலன்கள் மற்றும் பயன்படுத்து முறைகள் குறித்து அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பது எப்படி

Share -
Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.
0